என் மலர்
நீங்கள் தேடியது "பூத்து குலுங்கும் சங்கு பூக்கள்"
- சங்கு பூக்கள் பல்புகள் தொங்க விட்டது போல் ரோஸ், மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் சங்கு பூக்கள் பூத்து காணப்படு கிறது.
- வாகனத்தில் செல்பவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதனை ஒட்டிய மலைக்கி ராமங்களில் அவ்வப்போது சீசனுக்கு ஏற்றவாறு விதவிதமான பூக்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம்.
அதன்படி தற்போது கீழ்மலை கிராமங்களான பெரும்பாறை, தாண்டிக்குடி, பண்ணைக்காடு, மங்களம்கொம்பு, புல்லா வெளி, கே.சி.பட்டி போன்ற பகுதியில் அதிகமானோர் காபி, வாழை, மிளகு போன்ற பயிர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் யாரும் செல்லாமல் இருக்க வும் அவரவர் தோட்டம் எல்லைகளில் வேலிக்காக சங்கு பூ செடிகளை நடவு செய்துள்ளனர். அதே போல் மஞ்சள்பரப்பு, புல்லாவெளி பகுதியில் உள்ள தோட்டங்களில் தார் சாலை ஓரங்களில் வேலி க்காக நடவு செய்துள்ளனர்.
இந்த சங்கு பூ செடிகளில் அதிக அளவு பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இப்பகுதிகளில் சாலை ஓரங்களில் பல்புகள் தொங்க விட்டது போல் ரோஸ், மஞ்சள், வெள்ளை போன்ற நிறங்களில் சங்கு பூக்கள் பூத்து காணப்படு கிறது. இந்த பூ காலையில் மலர்ந்து மாலையில் உதிர்கிறது. இந்தப்பூக்களை வாகனத்தில் செல்பவர்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிப்பதுடன், புகைப்படமும் எடுத்து மகிழ்கின்றனர்.






