என் மலர்
நீங்கள் தேடியது "கொங்கலம்மன் கோவில்"
- கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 3-ந் தேதி நடைபெற்றது.
- நாளை காலை 6 மணிக்கு பூா்ணாஹூதி, தீபாராதனை, சங்காபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது.
வெள்ளகோவில் :
வெள்ளகோவில் அருகே உள்ள சேனாபதிபாளையம் கிராமம் அய்யனூாில் பிரசித்தி பெற்ற கொங்கலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா கடந்த மாதம் 3-ந் தேதி நடைபெற்றது.
அதைத் தொடா்ந்து மண்டலாபிஷேக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் 48-ம் நாள் நிறைவு மண்டலாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு நாளை காலை 5 மணிக்கு விநாயகா் வழிபாடு, புண்யாஹம், பஞ்சகவ்யம், சங்குஸ்தாபனம், கலச ஸ்தாபனம், விசேக ஹோமங்கள் நடைபெற உள்ளன. 6 மணிக்கு பூா்ணாஹூதி, தீபாராதனை, சங்காபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது.
அதனை தொடா்ந்து 8 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்படுகிறது. பின்னா் கோவிலில் வீற்றிருக்கும் செல்வசித்தி விநாயகா், அரசு வேம்பு விநாயகா் மற்றும் அஷ்ட நாக தேவதைகளுக்கும், இரவு 7.55 மணிக்கு கொங்கலம்மனுக்கும் சங்காபிஷேகத்துடன் மண்டலாபிஷேக நிறைவு விழா நடக்கிறது. இரவு 8.05 மணிக்கு வள்ளி கும்மிபாட்டு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அய்யனூா் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.






