என் மலர்
நீங்கள் தேடியது "Killed in a car கிராஷ் கார் மோதி பலி"
- சுப்பிரமணி (வயது 90). இவர் நேற்று அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
- கார் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள முனிய கவுண்டம் பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 90). இவர் நேற்று அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே சாலையின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது பரமத்திவேலூரில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி அதிவேகமாக சென்ற கார், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சுப்பிரமணிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சுப்பிரமணி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சுப்பிரமணி மீது மோதி விட்டு நிற்காமல் சென்று தலைமறை வான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.






