என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.1 கோடிக்கு மேல் விற்பனை"
- நாளை மறுதினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்ததால் விற்பனை களைகட்டியது
- 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8500-க்கு விலைபோனது.
வடமதுரை:
திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூரில் வாரந் ேதாறும் வியாழக்கிழமை ஆட்டுச்சந்தை நடைபெறும். அதிகாலை 2 மணிக்கு தொடங்கும் இந்த சந்தை 10 மணிவரை நடைபெறும். திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, தேனி, கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
அய்யலூர், வடமதுரை, வேடசந்தூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் முதல் நாளே சந்தையில் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். ஆடு, நாட்டுகோழிகள் உள்பட அதற்கு ேதவையான தீவனங்களும் விற்பனை செய்யப்படும். நாளை மறுதினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்று ஏராளமான வியாபாரிகள் ஆடுகளை வாங்க குவிந்ததால் விற்பனை களைகட்டியது. 10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.8500-க்கு விலைபோனது.
செம்மறி ஆடு ரூ.10000 வரையிலும், நாட்டுகோழி ரூ.360 முதல் ரூ.400 வரையிலும் விற்பனை யானது. மேலும் கட்டு ச்சேவல்கள் வாங்குவதற்கும் ஏராளமான இளைஞர்கள் வந்திருந்தனர். தரமான கட்டுசேவல்களை சந்தையில் சண்டையிட்டு வாங்கிச்சென்றனர். கட்டுசேவல் சண்டைக்கு தடைவிதித்திருந்த போதிலும் பல்வேறு கிராமங்களில் இன்னும் இந்த போட்டி மறைமுகமாக நடைபெற்று வருகிறது.
தற்போது கோவில் திருவிழாக்கள் அதிகளவில் நடந்து வருவதால் விழாக்க ளில் சேவல் சண்டையும் நடத்தப்பட்டு வருகிறது. சந்தை தனியார் மூலம் நடைபெறுவதால் பல்வேறு அடிப்படை வசதிகள் குறைபாடாக உள்ளது எனவும், பேரூராட்சி நிர்வாகமே நடத்தவேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். அய்யலூர் ஆட்டுச்சந்தையில் இன்று ரூ.1 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால் வியாபாரிகளும், விவசாயி கள் மகிழ்ச்சி அடைந்தனர்






