என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாறாந்தை"

    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் மீனா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
    • தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் அடிக்கல் நாட்டினார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் அருகே உள்ள மாறாந்தையில் ரூ.11.24 லட்சம் மதிப்பில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டது. மாவட்ட ஊராட்சி தலைவர் நிதியில் இருந்து ரூ.4.64 லட்சம் மதிப்பில் வாறுகால் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் மீனா சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் இந்திரா, ஒன்றிய குழு உறுப்பினர் கலா, மாவட்ட பிரதிநிதி ஜோசப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் அடிக்கல் நாட்டினார்.

    தொடர்ந்து பணிகள் நிறைவடைந்த மாறாந்தை 8-வது வார்டு ஊர் பொது கிணற்றில் ரூ.3.60 லட்சம் செலவில் நீர்மூழ்கி மோட்டார் அமைத்து குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் ஆதி திராவிடர் மயானத்தில் ரூ.3 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் தொட்டி கட்டுதல் ஆகிய திட்டங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மாவட்ட ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், தி.மு.க. கிளை செயலர்கள் வசந்த், கணேசன், வெள்ளத்துரை, சேகர்,அரசு ஒப்பந்ததாரர் முத்துபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×