என் மலர்
நீங்கள் தேடியது "குட்கா ஹான்ஸ் பாக்கெட் விற்றவர் கைது"
- 150 பாக்கெட்டுகளை பறிமுதல்
- ஜெயிலில் அடைத்தனர்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் டவுன் போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது மாங்காய் தோப்பு பகுதியில் தேவலாபுரம் ஊராட்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகன் பாபு வயது (34) என்பவர் மளிகை கடை நடத்தி வருகிறார் .
அந்த கடையில் போலீசார் சோதனை செய்தபோது கடையில் ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்தது.
போலீசார் 150 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து பாபுவை கைது செய்து வழக்கு பதிவு செய்து ஆம்பூர் சிறையில் அடைத்தனர்.






