என் மலர்
நீங்கள் தேடியது "தன்னார்வலர்களுக்கு பயிற்சி"
- இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி நடைபெறுகிறது.
- ்பயிற்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஒன்றிய பகுதியில் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்களுக்கு சூளகிரி வட்டார கல்வி அலுவலகத்தில் 2 நாட்கள் புத்தாக்க பயிற்சி நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் பயிற்சிக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். சூளகிரி வட்டார கல்வி அலுவலர்கள் வெங்க ட்குமார், மாதேஷ், ஜாஜ், இந்திரா தொடங்கி வைத்து சிறப்புரை யாற்றினார்கள்.
ஆசிரியர் பயிற்றுநர்கள் வைத்தியநாதன், சங்கரன், குமார், மற்றும் இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கினர். பயிற்சியில் 40- க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் நன்றி கூறினார்.






