என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இணையம் மூலம் நெல் கொள்முதல்"

    • கலெக்டர் தகவல்
    • ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை நடக்கிறது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலமாக நாளை (சனிக்கிழமை) முதல் 21 கிராமங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கிராமங்களின் விவரம் வருமாறு:-

    வளர்புரம், அனந்தாங்கல், கே.வேளூர், வீர நாராயணபுரம், பாராஞ்சி, ஜம்புகுளம், வணக்கம்பாடி, அத்திப்பட்டு, வளையாத்தூர், தாமரைப்பாக்கம், சென்னசமுத்திரம் (கலவை), முகுந்தாரயபுரம், மேல்புதுப்பாக்கம், வெள்ளம்பி, குப்பிடிசாத்தம், நகரிகுப்பம், ரங்காபுரம் (பாணாவரம்), கொண்டகுப்பம், சாத்தூர், சேந்தமங்கலம், சங்கரன்பாடி.

    மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் இதுவரை 36 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல் கொள்முதல் பணி நடைப்பெற்று வருகிறது. 29-ந் தேதி வரை 1112 விவசாயிகளிடம் சுமார் 9070 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.6 கோடி இதுவரை செலுத்தப்பட்டுள்ளது.

    மேற்கண்ட கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெரும்வகையில் தேசிய கூட்டுறவு நுகர்வோர் இணையம் கொள்முதல் செய்ய உத்திரவு வழங்கப்பட்டுள்ளது.இந்த தகவலை மாவட்ட கலெக்டர் வளர்மதி தெரிவித்தார்.

    ×