என் மலர்
நீங்கள் தேடியது "துணை கலெக்டர் திடீர் ஆய்வு"
- வருகை பதிவேடு சோதனை
- விதைகள், விவசாய இடுபொருட்கள் ஆகியவற்றின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்ட ஆய்வு குழு அலுவலர் (துணை ஆட்சியர்)கிருஷ்ண மூர்த்தி நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அலுவலகத்தில் உள்ள வருகை பதிவேடு மற்றும் ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் விதைகள், விவசாய இடுபொருட்கள் ஆகியவற்றின் இருப்பு குறித்தும் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது நெமிலி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அருணாகுமாரி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.






