என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவசர செயற்குழு கூட்டம்"

    • நாளை நடக்கிறது
    • தேவராஜி எம்.எல்.ஏ. அறிக்கை

    வாணியம்பாடி:

    திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க.செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க அவசர செயற்குழு கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 9மணியளவில் வாணியம்பாடி நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள கே.பி.ஏ பேலஸ்-ல் மாவட்ட அவைத் தலைவர் ஆர்.எஸ்.ஆனந்தன் தலைமையில் நடைபெற உள்ளது.

    நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநில, மாவட்ட கழக நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அணி அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா புதிய உறுப்பினர்கள் சேர்த்தல், வாக்குசாவடி முகவர்கள் அமைத்தல், கட்சி ஆக்கப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×