என் மலர்
நீங்கள் தேடியது "வில்லாயி அம்மன்"
- வேங்கராயன் குடிகாடு வில்லாயி அம்மன் கோவிலில் பெருந்திருவிழா ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது
- நிகழ்ச்சியில் காச வளநாட்டைச்சேர்ந்த 18 கிராமங்களின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே உள்ள வேங்கராயன்குடிக்காடு கிராமத்தில் 16ஆண்டுக ளுக்குப் பிறகு பெருந்திருவிழா வரும் மே மாதம் இறுதி வாரத்தில் நடைபெற உள்ளது.
இதை ஒட்டி அதற்கான காப்பு கட்டுதல் மற்றும் அம்பாள் ஊஞ்சல் உற்சவம் காணும் நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது.
முன்னதாக வில்லாயி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் பூஜைகள் ஆகியவை நடைபெற்றது.
பின்னர் அம்மன் கோவிலை சுற்றி மண்டபத்தில் உள்ள பிரகாரத்தில் ஊஞ்சலில் வைக்கப்பட்டது .
அங்கே அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து படையல் இடப்ப ட்டது.
பின்னர் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காச வளநாட்டைச்சேர்ந்த 18 கிராமங்களின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து 48 நாட்களுக்கு காலை, மாலை இரு வேளையும் வில்லாதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற உள்ளது.
பெருந்திருவிழாவில் மே மாதம் 20-ந் தேதி அம்மன் வீதி உலா, 21-ந் தேதி ஆட்டு கிடா வெட்டுதல், 23-ந் தேதி மஞ்சள் நீராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.






