என் மலர்
நீங்கள் தேடியது "நாள் விடுப்பு போராட்டம்"
- பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
- பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வலியுறுத்தல்
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் உள்ள வருவாய்த்துறை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்திலுள்ள 211 வருவாய்த்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்ததால் வருவாய்த்துறை அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை கலெக்டர் பட்டியலை உடன் வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும். ேகார்ட்டு தீர்ப்பின் காரணமாக துணை வட்டாட்சியர் உள்ளிட்ட பதவி உயர்வு பட்டியல் திருத்தத்தின் காரணமாக பதவி இறக்கம் பெறும் அலுவலர்களின் பதவி உயர்வு பாதுகாப்பிற்கான ஆணைகள் விரைவில் வழங்கிட வேண்டும். அலுவலக உதவியாளர் காலியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும்.
இளநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மற்றும் அரசாணையை வெளியிட வேண்டும். அரசு மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீது உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினர்.






