என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொப்பரை கொள்முதல்‌"

    • வருவாயினை பெருக்கிடவும்‌, தமிழக அரசு பல்வேறு உழவர்‌ நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
    • வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின்‌ மூலம்‌, விலை ஆதரவு திட்டத்தின்‌ கீழ்‌, ஏக்கர்‌ ஒன்றுக்கு 291 கிலோ கொப்பரை என்ற வீதத்தில்‌, குறைந்த பட்ச ஆதரவு விலையில்‌ கொள்முதல்‌ செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரியவிலை கிடைத்திடவும், அவர்களின் வருவாயினை பெருக்கிடவும், தமிழக அரசு பல்வேறு உழவர் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில், தென்னை சாகுபடி செய்த விவசாயிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் விளைவித்த அரவை கொப்பரையினை மத்திய அரசின் தேசிய வேளாண்மை கூட்டுறவு விற்பனை இணையத்தின் மூலம், விலை ஆதரவு திட்டத்தின் கீழ், ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொப்பரை என்ற வீதத்தில், குறைந்த பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதன்படி, சேலம் மாவட்டத்தில் 300 மெ.டன் அரவை கொப்பரை கொள்முதல் செய்யப்படவுள்ளது. இத்திட்டத்தில் சேலம், மேச்சேரி மற்றும் வாழப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் முதன்மை கொள்முதல் நிலையங்களாக செயல்படவுள்ளது.

    இம்மையங்களில் அரவை கொப்பரை குறைந்தபட்ச ஆதரவு விலையான கிலோ ஒன்றுக்கு ரூ.108.60 வீதம் 2023-ஆம் ஆண்டில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் முடிய கொள்முதல் செய்யப்படவுள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் அரவை கொப்பரைக்கான கிரையத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்படும்.

    இத்திட்டத்தின் மூலம் கொள்முதல் செய்யப்படவுள்ள அரவை கொப்பரை அயல்பொருட்கள் 1 சதவீதமும், பூஞ்சானம் மற்றும் கருமை நிறம் கொண்ட கொப்பரை 10 சதவீத எண்ணிக்கையிலும், சுருக்கம் கொண்ட கொப்பரை 10 சதவீத எண்ணிக்கையிலும், சில்லுகள் 10 சதவீத அடிப்படையிலும், ஈரப்பதம் 6 சதவீத அடிப்படையிலும் நியாயமான சராசரி தரத்தினை கொண்டிருத்தல் வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

    ×