என் மலர்
நீங்கள் தேடியது "பால்கம்பம் நடும் விழா"
- பங்குனி மாதத்தில் தேர்திருவிழா (பிரம்மோற்சவ விழா) கோலாகலமாக நடைபெறும்.
- தேருக்கு பூஜைகள் செய்து புனிதநீர் தெளித்து வேத மந்திரங்கள் ஓதி மேளதாளங்கள் முழங்க பால் கம்பம் நட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பிரசித்திபெற்ற பேட்டராய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் தேர்திருவிழா (பிரம்மோற்சவ விழா) கோலாகலமாக நடைபெறும்.
இந்த ஆண்டு திருவிழா வரும் ஏப்ரல் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா ஏப்ரல் 4-ஆம் தேதி நடக்கிறது. திருவிழாவுக்கான தேர் கட்டும் பணிக்கு பால் கம்பம் நடும் விழா நடைபெற்றது.
முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேட்டராய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்து பால்கம்பத்தை எடுத்து கொண்டு கோவிலை சுற்றி வலம் வந்து தேருக்கு பூஜைகள் செய்து புனிதநீர் தெளித்து வேத மந்திரங்கள் ஓதி மேளதாளங்கள் முழங்க பால் கம்பம் நட்டு பூஜைகள் செய்யப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி தலைவர் சீனிவாசன், அதிமுக முன்னால் நகர செயலாளர் நாகேஷ், பழனிசாமி பன்னீர்செல்வம் ஜெயராமன், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.






