என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.7.63 லட்சத்துக்கு ஏலம்"
- அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
அணைக்கட்டு:
அணைக்கட்டு ஒன்றியத்திற்க்கு உட்பட்ட 2 ஊராட்சிகளில் நடக்கும் வார சந்தை ரூ. 7.63 லட்சத்துக்கு ஏலம் விடப்பட்டது.
அணைக்கட்டு ஒன்றியத்திற்குட்பட்ட கெங்கநல்லூர் மற்றும் கரடிகுடி ஆகிய ஊராட்சிகளில் வாரச்சந்தை நடத்துவதற்க்கான ஏலம் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் தலைமை தாங்கினார். அலுவலக மேலாளர் சதீஷ், துனை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகேந்திரன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நேற்று காலை 11 மணியளவில் முதலாவதாக வாரந்தோறும் சனிக்கிழமைகளில் நடக்கும் கெங்கநல்லூர் வாரச்சந்தை ஏலம் விடப்பட்டது. இதில் மொத்தம் 17 ஏலதாரர்கள் கலந்துக்கொண்டு ஏலத்தை குறைந்த ஏலத்தொகையான ரூ.50 ஆயிரம் முதல் கேட்கப்பட்டது.
அப்போது ஏலதாரர்கள் இடையே சிறிது நேரம் சலசலப்பு, வாக்குவாதம் ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கருணாகரன், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் ஏலாதாரர்களை சமாதானப்படுத்தினர். இதன் பின் தொடர்ந்து ஏலம் நடத்தது.
இதில் இறுதியாக இராமாபுரம் அடுத்த கன்னிகாபுரம் கிராமத்தை சேர்ந்த ஜி.தவமணி என்பவர் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் கேட்டார். இதில் கடந்த ஆண்டு ரூ 4.51 லட்சத்து ஏலம் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆண்டு கூடுதாலாக ரு. 5 லட்சத்திற்கு ஏலம் நடத்தப்பட்டது.
இதில் ஜி.எஸ்.டி 18 சதவீதம் மற்றும் 2 சதவீதம் வரி என மொத்தம் 20 சதவீதம் கூடுதலாக பணம் செலுத்தி வார சந்தையை நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
இதனையடுத்து வாரம்தோறும் புதன்கிழமைகளில் நடக்கும் கரடிகுடி வார சந்தைக்கான ஏலம் மாலை 3 மணியளவில் நடந்தது. இதில் பி.வி.ஆர் எண்டர்பிரைஸ் நிருவனம் ரூ.2 லட்சத்து 63 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்தனர். அதே போல் 20 சதவீதம் ஜி.எஸ்.டி, வரி செலுத்தி வார சந்தை நடத்த அணுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் கடந்த ஆண்டு ரூ. 84 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த ஆண்டு ரூ. 2 லட்சத்து 63 ஆயிரத்துக்கு ஏலம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.






