என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அட்டை வழங்கும் பணி"

    • உறுப்பினர் உரிமை அட்டை வழங்கும் பணி தொடக்க நிகழ்ச்சி தருமபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
    • கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    தருமபுரி,

    தருமபுரியில் மாவட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் உரிமை அட்டை வழங்கும் பணி தொடக்க நிகழ்ச்சி தருமபுரியில் உள்ள கட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி உறுப்பினர் உரிமைச் சீட்டு வழங்கும் பணியை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் பூக்கடை ரவி, மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பழனி, மாவட்ட இணை செயலாளர் செல்வி திருப்பதி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் தகடூர் விஜயன், நகர அவைத் தலைவர் அம்மா வடிவேல், நகர துணை செயலாளர் அறிவாளி மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×