என் மலர்
நீங்கள் தேடியது "கோவில் நிலம் சுவர்"
- னிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வருவதாகவும், அதை மீட்கவும் தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது.
- மீனவர்கள் செல்லும் வழியை தடுப்பதாகவும் குற்றம் சாட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் நெம்மேலி ஆளவந்தார் அறக்கட்டளைக்கு சொந்தமாக கடலோர பகுதியில் 1,054 ஏக்கர் நிலம் உள்ளது. பலகோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை இந்து அறநிலையத்துறை தனி செயல் அலுவலரை நியமித்து நிர்வகித்து வருகிறது.
இந்தநிலத்தை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வருவதாகவும், அதை மீட்கவும் தொடர்ந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும் உயர் நீதி மன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து 10 கி.மீ. தூரத்திற்கு 10.44 கோடி ரூபாய் செலவில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் அப்பகுதியை சேர்ந்த 5 மீனவ கிராம மக்கள் செல்ல வழி இல்லாத நிலை ஏற்படுவதாக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து திருப்போரூர் தாசில்தார் பூங்கொடி, செயல் அலுவலர் சக்திவேல், மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் மாமல்லபுரத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மீனவர்கள் அறக்கட்டளை நிர்வாகத்தினர் முறைகேடாக பண்ணை வீடு, ரிசார்ட், ஓட்டகளுக்கு வழி விடுவதாகவும், மீனவர்கள் செல்லும் வழியை தடுப்பதாகவும் குற்றம் சாட்டி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது.






