என் மலர்
நீங்கள் தேடியது "துஷ்யந்த்"
- துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் நடிக்கும் உளவியல் அடிப்படையிலான கதை 'பேரடாக்ஸ்'*
- இயக்குநர் சேரன் ஒரு பாடலை இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி செய்லர்மேன் பிக்சர்ஸ் பேனரில் கார்த்திகேயன் எல் தயாரிப்பில் பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் நடிக்கும் உளவியல் அடிப்படையிலான கதை 'பேரடாக்ஸ்'*
தி செய்லர்மேன் பிக்சர்ஸ் பேனரில் கார்த்திகேயன் எல் தயாரிப்பில் பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படத்திற்கு 'பேரடாக்ஸ்' (Paradox) என்று பெயரிடப்பட்டுள்ளது.
துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'பேரடாக்ஸ்' குறும்படத்தின் டிரெய்லரை திரையுலக பிரபலங்களான இயக்குநர்-நடிகர் சேரன், இயக்குநர்-நடிகர் எம். சசிகுமார், நடிகர் பிரசன்னா மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனன் ஆகியோர் வெளியிட்டு முன்னோட்டத்தை பாராட்டியதோடு இயக்குநர் பிரியா கார்த்திகேயன் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த குறும்படத்திற்காக இயக்குநர் சேரன் ஒரு பாடலை இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரியா கார்த்திகேயன், "ஒரு மனிதனின் உளவியல் பற்றி இப்படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை வாழும் நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறான். இந்நிலையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. இதை தொடர்ந்து என்ன ஆகிறது என்பதை 'பேரடாக்ஸ்' பார்வையாளர்களுக்கு விளக்கும்," என்றார். குறும்படம் இன்று யூடியூபில் வெளியாக இருக்கிறது.
'பேரடாக்ஸ்' குறும்படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்க, ஃபைசல் வி காலித் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை ஹரிபிரகாஷ் மேற்கொண்டுள்ளார். ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக் கலவையை எஸ் சிவகுமார் மற்றும் கிருஷ்ணன் சுப்பிரமணியனும், கலரிங்கை குபேந்திரனும், டிஐ பணிகளை இன்பினிட்டி மீடியாவும் செய்துள்ளனர்.
- நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனம் ஈஷன் புரொடக்ஷன்ஸ்.
- ஈஷன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் ரூ.4 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் மற்றும் அவருடைய மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈஷன் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் நடிப்பில் 'ஜகஜால கில்லாடி' என்ற படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் ரூ.4 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர்.
இந்த ரூ.4 கோடி ரூபாய் கடன் தொகையை 30 சதவீத வட்டியுடன் திருப்பி செலுத்த வேண்டும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த கடன் தொகையை திருப்பி செலுத்தாததையடுத்து இந்த விவகாரத்தில் தீர்வு காணும் வகையில் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி என். கோவிந்த ராஜை மத்தியஸ்தராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தனபாக்கியம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த மனுவில் 2022-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை வட்டியுடன் சேர்த்து 5 கோடியே 41 லட்சத்து 41 ஆயிரத்து 500 ரூபாய் செலுத்த வேண்டியிருந்த நிலையில் ரூ. 41 லட்சத்து 85 ஆயிரம் மட்டுமே வட்டியாக செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான நோட்டீசுக்கு முறையாக பதிலளிக்காமலும் சமரச பிரிவு ஒப்பந்தத்தை ஏற்காமலும் ஈசன் நிறுவனம் செயல்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி இந்த மனு தொடர்பாக மார்ச் 23-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஈசன் பட நிறுவனத்திற்கும் துஷ்யந்த் , அபிராமி மற்றும் துஷ்யந்த்தின் தந்தை ராம்குமார் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளி வைத்துள்ளனர்.
- துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன்.
- படத்தின் அடுத்த பாடலான Awesome Feelu பாடல் வெளியாகியுள்ளது.
இளம் நடிகர்களான துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரியல்லா இணைந்து நடித்துள்ள திரைப்படம் வருணன். இப்படத்தை யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ளார். படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஏற்கனவே படத்தின் பாடலான காதலே மற்றும் கோளாரு ஆகிய பாடல்கள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலான ஆசம் பீலு பாடல் வெளியாகியுள்ளது.
படத்தின் இசையை போபோ சாஷி மேற்கொண்டுள்ளார். ஒளிப்பதிவை ஸ்ரீராம சந்தோஷ் மேற்கொண்டுள்ளார். படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






