என் மலர்
சினிமா செய்திகள்
திரையுலக பிரபலங்கள் சேரன், சசிகுமார், ஆரி வெளியிட்ட Paradox குறும்படத்தின் டிரெய்லர்
- துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் நடிக்கும் உளவியல் அடிப்படையிலான கதை 'பேரடாக்ஸ்'*
- இயக்குநர் சேரன் ஒரு பாடலை இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி செய்லர்மேன் பிக்சர்ஸ் பேனரில் கார்த்திகேயன் எல் தயாரிப்பில் பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் நடிக்கும் உளவியல் அடிப்படையிலான கதை 'பேரடாக்ஸ்'*
தி செய்லர்மேன் பிக்சர்ஸ் பேனரில் கார்த்திகேயன் எல் தயாரிப்பில் பிரியா கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள குறும்படத்திற்கு 'பேரடாக்ஸ்' (Paradox) என்று பெயரிடப்பட்டுள்ளது.
துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மிஷா கோஷல் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'பேரடாக்ஸ்' குறும்படத்தின் டிரெய்லரை திரையுலக பிரபலங்களான இயக்குநர்-நடிகர் சேரன், இயக்குநர்-நடிகர் எம். சசிகுமார், நடிகர் பிரசன்னா மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனன் ஆகியோர் வெளியிட்டு முன்னோட்டத்தை பாராட்டியதோடு இயக்குநர் பிரியா கார்த்திகேயன் உள்ளிட்ட குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்த குறும்படத்திற்காக இயக்குநர் சேரன் ஒரு பாடலை இயற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
25 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படம் குறித்து பேசிய இயக்குநர் பிரியா கார்த்திகேயன், "ஒரு மனிதனின் உளவியல் பற்றி இப்படம் அலசுகிறது. சராசரி வாழ்க்கையை வாழும் நாயகன் கொஞ்சம் கொஞ்சமாக தனது மனைவி மற்றும் குடும்பத்தை விட்டு விலகி செல்கிறான். இந்நிலையில் ஒரு எதிர்பாராத சம்பவம் நிகழ்கிறது. இதை தொடர்ந்து என்ன ஆகிறது என்பதை 'பேரடாக்ஸ்' பார்வையாளர்களுக்கு விளக்கும்," என்றார். குறும்படம் இன்று யூடியூபில் வெளியாக இருக்கிறது.
'பேரடாக்ஸ்' குறும்படத்திற்கு கே எஸ் சுந்தரமூர்த்தி இசையமைக்க, ஃபைசல் வி காலித் ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பை ஹரிபிரகாஷ் மேற்கொண்டுள்ளார். ஒலி வடிவமைப்பு மற்றும் ஒலிக் கலவையை எஸ் சிவகுமார் மற்றும் கிருஷ்ணன் சுப்பிரமணியனும், கலரிங்கை குபேந்திரனும், டிஐ பணிகளை இன்பினிட்டி மீடியாவும் செய்துள்ளனர்.







