என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறைகளில் கைதிகள்"

    • சிறைத்துறை டி.ஜி.பி. தகவல்
    • சுயமாக தொழில் தொடங்க கடனுதவிகளும் வழங்க ஏற்பாடு

    வேலூர்:

    தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கணினி பயிற்சி வழங்க சிறைச்சாலை தோறும் கணினி மையங்கள் அமைக்கப்படும் என சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி தெரிவித்தார்.

    வேலூர் ஆப்காவில் தென்னிந்திய உயர் சிறை அதிகாரிகளுக்கான சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ்பூஜாரி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

    தமிழ்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு கணிப்பொறி பயிற்சி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு சிறைகளிலும் 30 கணினி கொண்ட கணினி பயிற்சி மையம் அமைக்கப்படும். தொண்டு நிறுவனங்களின் மூலம் கணினி பயிற்சியாளர்கள் கொண்டு சிறை கைதிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

    பயிற்சி பெற்ற சிறைவாசிகள் சிறையில் இருந்து வெளியில் சென்று சுயமாக கணினி மையம் தொடங்க அவர்களுக்கு கடனுதவிகளும் வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

    சிறையில் உள்ள கழிவறைகள் பழையதாகவும், தூய்மையற்றதாகவும் உள்ளது. அதனை புனரமைக்க கணக்கெடுப்பு நடத்தி இந்த ஆண்டு புனரமைக்கப்படும். அடுத்த ஆண்டு புதிய கழிவறைகள் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் மேலும் புதிதாக சிறைகளில் 12 பெட்ரோல் பங்க்குகள் திறப்பதற்கான இடம் தேர்வு நடைபெற்று வருகிறது.

    நடப்பு நிதி ஆண்டில் சிறைச்சாலைகளில் உள்ள கழிவறைகள் மறு சீரமைக்கப்பட்டு வருவதா கவும் சிறைச்சாலைகளில் விரைவில் புதிய கூடுதல் கழிப்பறைகள் கட்டப்படும் என அமரேஷ் பூஜாரி தெரிவித்தார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×