என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.1 லட்சம் வரை லஞ்சம்"
- நர்சரி பிரைமரி பள்ளிகள் நலச் சங்க நிர்வாகிகள் போராட்டம் அறிவிப்பு
- 23 பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் இன்று நடந்தது. இதில் தனியார் பள்ளிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு நர்சரி பிரைமரி பள்ளிகள் நலச் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளர் விஜயகுமார் கூறியதாவது:
வேலூர் மாவட்டத்தில் புதுப்பித்தல் அங்கீகாரம் பெறுவதற்காக 98 நர்சரி பள்ளிகள் 42 மெட்ரிக் பள்ளிகள் சார்பில் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளன.இந்த மனுக்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படவில்லை.
ரூ.25 ஆயிரம் வழங்கிய நர்சரி பள்ளிகள், 50 ஆயிரம் வழங்கிய மெட்ரிக் பள்ளிகள், ரூ.ஒரு லட்சம் வரை வழங்கிய சிபிஎஸ்சி பள்ளிகள் என மொத்தம் 23 பள்ளிகளுக்கு மட்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணத்தைப் பெற்றுக் கொண்டு அங்கீகாரம் வழங்கி வருகிறார். அவர் ஆய்வுக்கு வரும்போது கூட லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் விண்ணப்பித்துள்ள நர்சரி மெட்ரிக் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்காவிட்டால் 2000 பேரை திரட்டி மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.






