என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வானகரம் விபத்து"

    • ஆயில் லோடுடன் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.
    • தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    போரூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது35).

    சென்னையில் தங்கி ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார்.

    இவர் நேற்று நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் வானகரம் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். பின்னர் மதுரவாயல் பை பாஸ் சாலையில் ஏற முயன்றார்.

    அப்போது பின்னால் ஆயில் லோடுடன் வந்த டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த செந்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் செந்திலின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரான மணலியை சேர்ந்த சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×