என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளிக்கு 20 மேஜை"

    • அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 20 ஜோடி மேஜை, நாற்காலிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.
    • சமூகவியலாளர் முருகன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    தருமபுரி,

    தருமபுரி கலெக்டர் அலுவலகத்தில் வேளாண்மை துறையின் சார்பில் நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை திட்டத்தின் கீழ் வத்தல்மலை பெரியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு 20 ஜோடி மேஜை, நாற்காலிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

    பிரதம மந்திரி விவசாய நீர்பாசனத் திட்டம் 2.0 திட்டத்தின் கீழ் வத்தல்மலை நீர்வடிப்பகுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் நுழைவு கட்ட பணிகள் திட்டத்தின் கீழ் வத்தல்மலை நீர்வடிப்பகுதிகுட்பட்ட பெரியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.1,39,000- மதிப்பிலான 20 ஜோடிகள் மேஜை, நாற்காலி வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் உதவி இயக்கநர்சகாயராணி, .விஜயா, வேளாண்மை வேளாண்மை உதவி பொறியாளர் பத்மாவதி, பெரியூர் பள்ளி தலைமை ஆசிரியர் காமராஜ், அக்ரி அருண்ராஜ், சமூகவியலாளர் முருகன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×