என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விரலை கடித்து துப்பிய வாலிபர்"

    • தகராறை விலக்க சென்றபோது விபரீதம்
    • ஜெயிலில் அடைப்பு

    ஆரணி:

    ஆரணியை அடுத்த அக்ராபா ளையம் மந்தவெளி பகுதி யைச் சேர்ந்தவர் முருகன் (வயது 47). இவரது மனைவி வள்ளி.இவர்களது மகன் திரு நாவுக்கரசு. நேற்று முருகனுக் கும் அவரது மனைவி மற்றும் மகன் திருநாவுக்கரசு (25) ஆகி யோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    அப்போது அருகில் வசிக்கும் வள்ளியின் அண்ணன் பிச் சாண்டி (55) இதனை விலக்க வந்துள்ளார்.திருநாவுக்கரசை அமைதிப்படுத்த முயன்ற போது அவர் பிச்சாண்டியை தாக்கி கை சுண்டு விரலை கடித்துதுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    படுகாயம் அடைந்த பிச் சாண்டி ஆரணி அரசு மருத் துவமனையில் சேர்க்கப் பட்டு, மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்து பிச்சாண்டி யின் மகள் கவிதா ஆரணி தாலுகா போலீஸ் நிலையத் தில் புகார் அளித்தார்.

    இது குறித்து ஆரணி தாலுகா போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ் பெக்டர் மீனாட்சிசுந்தரம் வழக்குப்பதிவு செய்து தாய் மாமன் விரலை கடித்து துப் பிய திருநாவுக்கரசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×