என் மலர்
நீங்கள் தேடியது "மக்கள் கல்வி திட்டம்"
- கிராமபுறங்களில் ஏற்படும் வளர்ச்சி மத்திய அரசின் திட்டங்களின் மூலம் இந்திய நாட்டிற்கான வளர்ச்சியாக மாறும் எனவும் அப்போது எடுத்துரைக்கப்பட்டது.
- முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கு இந்த திட்டம் குறித்த பல்வேறு திறனறிதல் போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசுகளும், சான்றிதழ்களூம் வழங்கப்பட்டன.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த கவரைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கதர் மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில் மக்கள் கல்வி திட்டம் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையத்தின் மாநில இயக்குனர் பி.என்.சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் மாணவர்கள் எதிர்காலத்தில் தொழிலதிபர்களாக முன்னேறும் வகையில் பாரத பிரதமரின் வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்தும், மாணவர்கள் மற்றும் நடுத்தர இளைஞர்கள் வாழ்க்கையில் தொழிலதிபர்களாக உருவாகும் வகையில் வகுக்கப்பட்டு உள்ள மத்திய அரசின் சிறப்பு திட்டங்கள் மற்றும் இதற்காக வங்கி கடன்களில் உள்ள மானிய தள்ளுபடி போன்றவை படகாட்சிகள் மூலம் விளக்கப்பட்டது.
நாட்டில் கதர் பொருட்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அதற்காக மேம்படுத்தப்பட்ட தனி கவனத்திற்கு உரிய சிறப்பு திட்டங்களின் பயன்கள், அதனை பெறும் வழிமுறைகள் மற்றும் அதனால் கிராம புற மக்கள் அடையும் வளர்ச்சி குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் கிராமபுறங்களில் ஏற்படும் வளர்ச்சி மத்திய அரசின் திட்டங்களின் மூலம் இந்திய நாட்டிற்கான வளர்ச்சியாக மாறும் எனவும் அப்போது எடுத்துரைக்கப்பட்டது. முன்னதாக கல்லூரி மாணவர்களுக்கு இந்த திட்டம் குறித்த பல்வேறு திறனறிதல் போட்டிகள் நடத்தப்பட்டு அதற்கான பரிசுகளும், சான்றிதழ்களூம் வழங்கப்பட்டன. கல்லூரி டைரக்டர் கபிலன், மற்றும் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்






