என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொழுந்தன் கைது"

    • அண்ணன் மனைவியான அண்ணியை கடந்த சில ஆண்டுகளாகவே ஒருதலையாக அவர் காதலித்து வந்துள்ளார்.
    • வேப்பங்குப்பம் போலீசாரிடம் அண்ணி கொழுந்தன் மீது புகார் கொடுத்தார்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த மேல்அரசம்பட்டு, பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி. இவரது மனைவி (வயது 46). விவசாயிக்கு 42 வயதில் தம்பி உள்ளார்.

    அவர் திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

    அண்ணன் மனைவியான அண்ணியை கடந்த சில ஆண்டுகளாகவே ஒருதலையாக அவர் காதலித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

    நேற்று அண்ணி குளியலறையில் குளித்து கொண்டிருந்தார்.

    இதனை நோட்டமிட்ட கொழுந்தன் அக்கம் பக்கம் யாரும் இல்லை என தெரிந்து கொண்டு குளியல் அறையை எட்டிப்பார்த்தார்.

    அப்போது திடீரென கதவை திறந்து உள்ளே சென்று அண்ணியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அண்ணி கொழுந்தனை தள்ளிவிட்டு கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்தார்.

    அப்போது இதனைப்பற்றி யாரிடமாவது கூறினால் உன்னை கொன்றுவிடுவேன் என கொலைமிரட்டல் விடுத்துள்ளார். ஆனாலும் எதையும் மறைக்காமல் தன் கணவரிடம் இதனைப்பற்றி கூறியுள்ளார்.

    இதன்பின் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே அருகே இருந்த வேப்பங்குப்பம் போலீசாரிடம் அண்ணி கொழுந்தன் மீது புகார் கொடுத்தார்.

    போலீசார் விசாரணை நடத்தி கொழுந்தனை கைது செய்த சிறையில் அடைத்தனர்.

    ×