என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இடியும் நிலையில் பள்ளி கட்டிடம்"

    • குமணன்தொழு தெய்வேந்திரபுரம் கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
    • 30 ஆண்டுகளாக சீரமைப்பு பணிகள் நடைபெறாததால் சில வருடங்களில் பள்ளி கட்டிடம் இடிந்து விடும் அபாயம் உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே குமணன்தொழு தெய்வேந்திரபுரம் கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    இந்த பள்ளி கட்டிடங்கள் கட்டப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி உள்ள நிலையில் அதில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பள்ளி வகுப்பறை கட்டிடங்கள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. குறிப்பாக மேற்கூரை சேதமடைந்து சிமெண்ட் பகுதிகள் உடைந்து விழுந்து கம்பிகள் வெளியில் நீட்டியவாறு காணப்படுகிறது. இதே போல வகுப்பறை சுவர்களில் விரிசல்கள் காணப்படுகிறது.

    இதனால் ஆசிரியர்கள் அச்சத்துடனே குழந்தைகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். மேலும் மழை பெய்யும் நேரங்களில் வகுப்பறை கட்டிடங்களுக்குள் நீர்க்கசிவு ஏற்படுவதால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. சீரமைப்பு பணிகள் நடைபெறவில்லை என்றால் அடுத்த சில வருடங்களில் பள்ளி கட்டிடம் இடிந்து விடும் அபாயம் உள்ளது.

    இது தொடர்பாக பொதுமக்கள் கூறுகையில், பள்ளி கட்டிடம் கட்டப்பட்ட பின்பு அதில் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் இடிந்து விழும் நிலையில் கட்டிடங்கள் உள்ளது.

    எனவே பெரும்பாலான பெற்றோர்கள் அச்சத்தால் தங்களது குழந்தைகளை வேறு கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைத்து வருகின்றனர்.

    இதனால் தெய்வேந்திரபுரம் பள்ளியில் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை விகிதம் குறைந்து வருகிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கல்வி ஆண்டில் அனைத்து மாணவர்களையும் வேறு கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க பெற்றோர்கள் முடிவு செய்துள்ளனர்.

    மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து தெய்வேந்திரபுரம் அரசு ஆரம்பப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    ×