என் மலர்
நீங்கள் தேடியது "பட்டய கணக்காளா்"
- இந்திய அளவில் 2-வது இடத்துக்கான விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது.
- செயலாளா் செந்தில்குமாா், பொறுப்பாளா்கள் சோனிய குப்தா, தருண் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.
திருப்பூர் :
புதுடெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐசிஏ.ஐ எனப்படும் இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 165 கிளைகளும், வெளிநாடுகளில் 35 கிளைகளும் உள்ளன. இந்நிலையில், சிறந்த கிளைகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் அண்மையில் நடைபெற்றது.
இதில் 750 உறுப்பினா்களை கொண்ட பிரிவில் திருப்பூா் பட்டயக் கணக்காளா் கிளை, இந்திய அளவில் 2-வது இடத்துக்கான விருதுக்கு தோ்வு செய்யப்பட்டது. இதற்கான நிகழ்ச்சியில் நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் கலாசாரத் துறை மத்திய இணை அமைச்சா் அா்ஜூன்ராம் மேக்வால் விருதினை வழங்க திருப்பூா் பட்டயக் கணக்காளா் கிளையின் தலைவா் வரதராஜன், துணைத் தலைவா் சரவணராஜா, செயலாளா் செந்தில்குமாா், பொறுப்பாளா்கள் சோனிய குப்தா, தருண் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.






