என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நில அளவை அலுவலர்கள்"

    • தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.
    • நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மற்றும் ஆய்வுக்குட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது.

    திருவள்ளூர் மாவட்ட தலைவர் செந்தில்குமரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் ஜோதி, இணை செயலாளர் ராஜசேகர், கோட்டத் தலைவர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில துணைத்தலைவர் மணிகண்டன், மாவட்ட நிர்வாகிகள் இளங்கோவன், மெல்கிராஜா சிங் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

    போராட்டத்தின்போது, பணியாளர்களின் பணிச்சுமையை குறைத்திட வேண்டும்.

    நில அளவை சார்ந்த அனைத்து பணிகளையும் கருத்தில் கொள்ளாமல் உட்பிரிவு பட்டா மாறுதல் பணியினை மற்றும் ஆய்வுக்குட்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும். துறையில் பணி செய்து வரும் உரிமம் பெற்ற நில அளவர்களை தகுதியின் அடிப்படையில் நிரந்தர ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட வேண்டும் என்பது உட்பட 26 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தப்பட்டது.

    முடிவில் தாலிப் நன்றி கூறினார்.

    ×