என் மலர்
நீங்கள் தேடியது "30 அடி உயர புதிய கொடிமரம்"
- புதிய கொடிமரம் அமைப்பதற்கு சுமார் ரூ.7 லட்சம் மதிப்பில் 30 அடி உயரமுள்ள பர்மா தேக்கால் ஆன மரம் வரவழைக்கப்பட்டு பாலாலய பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
வத்தலக்குண்டு:
வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு பழைய கொடிமரம் அகற்றப்பட்டு புதிய கொடிமரம் அமைப்பதற்கு சுமார் ரூ.7 லட்சம் மதிப்பில் 30 அடி உயரமுள்ள பர்மா தேக்கால் ஆன மரம் வரவழைக்கப்பட்டது.
அந்த கொடி மரத்தை வடிவமைக்கும் பணி நடைபெற்று வந்தது. புதிய கொடி மரத்திற்கு பாலாலய பூஜை செய்து வழிபாடு நடைபெற்றது. விழா ஏற்பாடுகள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் அன்பு, ஊராட்சி மன்ற கூட்டமைப்பு சங்கத் தலைவர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் இணை ஆணையர் பாரதி, துணை ஆணையர் கிருஷ்ணன், செயல் அலுவலர் கனகலட்சுமி, மண்டல ஸ்தபதி ஜெயராமன், நிலக்கோட்டை ஆய்வர் பிரவீன்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






