என் மலர்
நீங்கள் தேடியது "விவசாயிகளின் பங்களிப்பு"
- விவசாயிகளின் பங்களிப்புடன் நெல்லில் ரகம் தேர்வு செய்யப்பட்டது.
- இதற்கான ஏற்பாடுகளை பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பண்ணை அலுவலர்கள் மேகராசு, காமராசு, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, அஞ்சலி ஆகியோர் செய்திருந்தனர்.
பரமக்குடி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் பங்களிப்போடு நெல்லில் ரகங்களைத் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடந்தது. பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியர் முத்துராமு ரகங்களின் தேர்வில் விவசாயிகளின் பங்கு குறித்து எடுத்துரைத்தார். பரமக்குடி உதவி வேளாண்மை இயக்குநர் மனோகரன், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு ஏற்ற நேரடி நெல் விதைப்பு முறைக்குத் தகுந்த நெல் ரகங்களை உருவாக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். விவசாயிகள் ரகங்கள் விளைவிக்கப்பட்ட வயலுக்குச் சென்று தங்களுக்கு பிடித்த ரகங்களை வரிசையிட்டு கொடுக்கப்பட்ட சீட்டுகளை அந்தந்த ரகத்திற்கு பக்கத்தில் வைக்கப்பட்ட பெட்டியில் போட்டு தேர்வு செய்தனர். இதில் பரமக்குடி, நயினார் கோவில் வட்டார முன்னோடி நெல் விவசாயிகள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை பரமக்குடி வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பண்ணை அலுவலர்கள் மேகராசு, காமராசு, சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, அஞ்சலி ஆகியோர் செய்திருந்தனர்.






