என் மலர்
நீங்கள் தேடியது "இண்டர்சிட்டி ரெயில்"
- இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலானது சென்னை ரெயில் நிலையத்திற்கு செல்லாது என, தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
- இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை ரெயில் நிலையத்திற்கு வராமல் காட்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
திருப்பூர்:
காட்பாடி ரெயில் நிலையம் - அரக்கோணம் ரெயில் நிலையம் இடையே தண்டவாள பணிகள் நடந்து வருவதால் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலானது சென்னை ரெயில் நிலையத்திற்கு செல்லாது என, தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
வழக்கமாக கோவை ரெயில் நிலையத்தில் காலை 6:15 மணிக்கு புறப்படும் கோவை- சென்னை (12680) இடையேயான இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை ரெயில் நிலையத்திற்கு வராமல் காட்பாடி ரெயில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
மறுமார்க்கத்தில் மதியம் 2:30 மணிக்கு சென்னை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சென்னை- கோவை (12679) இடையோன ரெயில், காட்பாடி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.






