என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளியில் ஆண்டு விழா"

    • விழாவில், இந்தாண்டு ஓய்வு பெறும் மெர்சி என்ற ஆசிரியை கவுரவிக்கப்பட்டார்.
    • நடனமாடிய அனைவருக்கும் தலா ரூ.1,000- வீதம் பரிசுப் பொருள், தண்ணீர் பாட்டில், இனிப்பு ஆகியவற்றை குழந்தை பிரான்சிஸ் வழங்கினார். மேலும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்குவதாக கூறினார்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் புனித ஜான் போஸ்கோ அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.

    விழாவிற்கு, ஐ.வி.டி.பி. தொண்டு நிறுவனத்தின் தலைவர் ராமன் மகசேசே குழந்தை பிரான்சிஸ் தலைமை தாங்கினார். பள்ளி தாளாளர் ஏஞ்சலா முன்னிலை வகித்தார்.

    இதில், மாவட்ட கல்வி அலுவலர் கோவிந்தன், தொடக்கக்கல்வி அலுவலர் முனிராஜ், ஓசூர் தூய இருதய ஆண்டவர் ஆலய பங்குத்தந்தை சூசை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். விழாவில், இந்தாண்டு ஓய்வு பெறும் மெர்சி என்ற ஆசிரியை கவுரவிக்கப்பட்டார்.

    பள்ளிக் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் போர்டு, ஆண்டு விழாவில் நடனமாடிய அனைவருக்கும் தலா ரூ.1,000- வீதம் பரிசுப் பொருள், தண்ணீர் பாட்டில், இனிப்பு ஆகியவற்றை குழந்தை பிரான்சிஸ் வழங்கினார். மேலும் ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்குவதாக கூறினார்.

    மேலும் விழாவில், பள்ளி தலைமையாசிரியை ஜெயந்தி, சமத்துவபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கோபாலப்பா, ஓசூர் ஏஞ்சல்ஸ் ரோட்டரி சங்க தலைவி ஆலிவ் சாந்தி, மாநகராட்சி கவுன்சிலர்கள் இந்திராணி, பாக்யலட்சுமி, தேவி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×