என் மலர்
நீங்கள் தேடியது "பேட்டரி ஸ்கூட்டர்கள் சேதம்"
- அதிகாலை நேரம் என்பதாலும் அதிக போக்குவரத்து இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பூந்தமல்லி:
பெங்களூரில் உள்ள தனியார் கம்பெனியில் தயாரிக்கப்பட்ட பேட்டரியில் இயங்க கூடிய 25 இருசக்கர வாகனங்களை ஏற்றி கொண்டு பெங்களூரிலிருந்து பல்லாவரம் நோக்கி கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. கண்டெய்னர் லாரியை கர்நாடாகவை சேர்ந்த சதாசிவா (23) என்பவர் ஓட்டி வந்தார். உடன் கிளீனர் சும்மன் (23), இருந்தார்.
இன்று அதிகாலை தாம்பரம் - மதுரவாயல் பைபாஸ், குன்றத்தூர் அருகே சென்று கொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி பைபாஸ் சாலையில் உள்ள தடுப்பு சுவரின் மீது மோதி நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் கண்டெய்லர் லாரிலிருந்து அனைத்து பேட்டரி ஸ்கூட்டர்களும் கீழே விழுந்தது.
இதனை கண்டதும் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கிரேன் உதவியுடன் சாலையில் கவிழ்ந்த கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினார்கள். மேலும் கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் 25 பேட்டரி ஸ்கூட்டர்களும் சேதம் அடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் கிளீனர் காயமின்றி உயிர் தப்பினார்கள்.
இந்த சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். அதிகாலை நேரம் என்பதாலும் அதிக போக்குவரத்து இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.






