என் மலர்
நீங்கள் தேடியது "மரியன்னையின் திருஉருவம்"
- 50-வது ஆண்டு ஆலயத் திருவிழா நடைபெறுகிறது.
- 100-க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.
ஊட்டி,
கேரள மாநிலம், மானந்தவாடியில் உள்ள புகழ் பெற்ற தூய மரியன்னை ஆலயம் தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள தூய மரியன்னையின் திருஉருவம் 160-க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்களின் ஜெபத்துக்காக வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு அக்டோபரில் இந்த யாத்திரை மானந்தவாடியில் தொடங்கியது. கேரளம் மற்றும் தமிழகத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட ஆலயங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன்படி தூய மரியன்னையின் திருஉருவம் குன்னூா் புனித செபஸ்தியாா் ஆலயத்திற்க்கு வந்தடைந்தது. இங்கு நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனைக்குப் பின் கூடலூரில் உள்ள தா்மகிரி ஆலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த யாத்திரை மே 1-ந் தேதி முடிவடைகிறது. அன்றையதினம் மானந்தவாடியில் உள்ள தூய மரியன்னைஆலயத்தில் 50-வது ஆண்டு ஆலயத் திருவிழா நடைபெறுகிறது.






