என் மலர்
நீங்கள் தேடியது "ஜவுளி தொழிலாளர்"
- நிகழ்ச்சியில் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கான காப்பீடு, பெண்களுக்கு புடவை, இனிப்பு, உணவு வழங்கப்பட்டது.
- தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் இக்கோரிக்கை மனுவை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க துணை புரிவதாக எம்.எல்.ஏ., பரந்தாமன் உறுதி அளித்தார்.
சென்னை:
தமிழ்நாடு அனைத்து ஜவுளி தொழிலாளர்கள் நல சங்கம் சார்பாக புத்தாண்டு மற்றும் தை-1 திருநாளை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய ஜவுளி தொழிலாளர்களுக்கு சங்கத்தின் சார்பாக நல உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது.
மாநில தலைவர் ஜி.மஞ்சுளா தலைமை வகித்தார். நிறுவன தலைவரும், பொதுச் செயலாளருமான எம்.மதியழகன் முன்னிலை வகித்தார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ.பரந்தாமன், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை தலைவர் த.வெள்ளையன் பங்கேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
விழாவில் மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் இரா.செல்வம் (வி.சி.க), சமூக சேவகர் சி.எல்.செல்வம், (தமிழ்நாடு வணிகர் சங்கம்), காங்கிரஸ் புரசை கே.பெருமாள், வணிக சங்க தலைவர் பட்டாளம் வி.ஜெயகிருஷ்ணன், சங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் எஸ்.ரவி, எம்.இளங்கோவன், ஏ.செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொழிலாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கான காப்பீடு, பெண்களுக்கு புடவை, இனிப்பு, உணவு வழங்கப்பட்டது. ஜவுளி தொழிலாளர் சங்க கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.
எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. பரந்தாமனிடம் அனைத்து தொழிலாளர்களுக்கும் இ.எஸ்.ஐ., தொழிலாளர் வைப்பு நிதி, பண்டிகை போனஸ், ஜவுளி கடையில் பணிபுரியும் பெண்களுக்கு மகப்பேறுகால விடுமுறை, ஊதியம் வழங்கவேண்டும். உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அதனை பெற்றுக்கொண்ட பரந்தாமன் எம்.எல்.ஏ., தொழிலாளர் நலத்துறை அமைச்சரிடம் இக்கோரிக்கை மனுவை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்க துணை புரிவதாக உறுதி அளித்தார்.
நிகழ்ச்சியில் சங்க கவுரவ தலைவர் ஆர்.டி.பிரபு, மாநில அமைப்பாளர் சி.சிவகுமார், சங்க ஆலோசகர்கள் ஆர்.மகாதேவன், எல்.சுப்பிரமணி, துணை தலைவர் எம்.செந்தாமரை, பொருளாளர் ஆர்.ஜனனிரமேஷ், மாநில ஒருங்கிணைப்பாளர் பி.வெள்ளிக் கண்ணன். செயலாளர் எம்.அன்பழகன், எஸ்.ரேணுகாதேவி, பொருளாளர், செயலாளர். பி.பாஸ்கர், அலுவலக செயலாளர் எம்.ரூபன் உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.






