என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய எல்லைகள்"

    • எல்லைகள் விரிவாக்கப்பட்டு புதிய எல்லைகளை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
    • அனைத்து பணிகளும் திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமத்தால் நடத்தப்படும் என்றனர்.

    திருப்பூர் :

    உள்ளூர் திட்டக்குழும எல்லைகள் விரிவாக்கப்பட்டு திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது. எல்லைகள் விரிவாக்கப்பட்டு புதிய எல்லைகளை அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி அவிநாசி தாலுகாவில் தெக்கலூர், செம்பியநல்லூர், வேலாயுதம்பாளையம், கணியாம்பூண்டி, ராக்கியாபாளையம், புதுப்பாளையம், பழங்கரை, அவிநாசி, ஈட்டிவீரம்பாளையம், பெருமாநல்லுார், காளிபாளையம் கிராமங்கள்.

    பல்லடம் தாலுகாவில் சாமளாபுரம், இச்சிப்பட்டி, பூமலூர், வேலம்பாளையம், சுக்கம்பாளையம், செம்மிபாளையம், கோடாங்கிபாளையம், பருவாய், கே.அய்யம்பாளையம், கரடிவாவி, மல்லேகவுண்டன்பாளையம், புளியம்பட்டி, கே.கிருஷ்ணாபுரம், அனுப்பட்டி, பணிக்கம்பட்டி, சித்தம்பலம்.வடுகபாளையம், பல்லடம், நாரணாபுரம், கரைப்புதுார், கணபதிபாளையம், பொங்கலூர், மாதப்பூர், எலவந்தி, கேத்தனூர், வாவிபாளையம், வி.வடமலைபாளையம், வி.கள்ளிப்பாளையம், காட்டூர் கிராமங்கள்.

    திருப்பூர் வடக்கு தாலுகாவில், பொங்குபாளையம், கணக்கம்பாளையம், நெருப்பெரிச்சல், செட்டி பாளையம், வேலம்பாளையம், தொட்டிபாளையம், மண்ணரை கிராமங்கள் மற்றும் திருப்பூர் தெற்கில் திருப்பூர், ஆண்டிபாளையம், மங்கலம், இடுவாய், வீரபாண்டி, முத்தணம்பாளையம், நல்லூர், முதலிபாளையம், நெருப்பெரிச்சல், பெருந்தொழுவு, தொங்குட்டிபாளையம், உகாயனூர், வடக்கு அவிநாசிபாளையம்,அலகுமலை, கண்டியன்கோவில், தெற்கு அவிநாசிபாளையம் கிராமங்கள்.

    ஊத்துக்குளி தாலுகாவில் செங்கப்பள்ளி, முத்தணம்பாளையம், புஞ்சை ஊத்துக்குளி அக்ரஹார பெரியபாளையம், சர்க்கார் பெரியபாளையம் கிராமங்கள், திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.நகர் ஊரமைப்புத்துறை அலுவலர்கள் கூறுகையில், புதிய வருவாய் கிராமங்களை இணைத்து அரசாணை வெளியாகியுள்ளது. இனிவரும் காலங்களில் வீட்டுமனை அங்கீகாரம், மனைப்பிரிவு உருவாக்கம் என அனைத்து பணிகளும் திருப்பூர் நகர்ப்புற வளர்ச்சி குழுமத்தால் நடத்தப்படும் என்றனர். 

    ×