என் மலர்
நீங்கள் தேடியது "சிறைபிடித்து போராட்டம்"
- போக்குவரத்து பாதிப்பு
- அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து ெசன்றனர்
வேலூர்:
வேலூர் மாவட்டம் பென்னாத்தூரில் இருந்து அமிர்தி செல்லும் சாலை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.
குண்டும் குழியுமாக உள்ளதால் அடிக்கடி விபத்துகள் நடக்கிறது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பென்னாத்தூர் அமிர்தி சாலையை சீரமைக்க கோரியும் புதிய தார் சாலை அமைக்க வலியுறுத்தி நஞ்சு கொண்டாபுரம் பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதற்குப் பிறகு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.தொடர்ந்து சாலை மோசமாகவே நீடித்து வருகிறது.
இதில் நிலையில் நேற்று நஞ்சு கொண்டாபுரம் பகுதியில் மீண்டும் விபத்து ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த நஞ்சுக்கொண்டாபுரம் பகுதி பொதுமக்கள் இன்று காலை வேலூரில் இருந்து அமிர்தி செல்லும் அரசு டவுன் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவவறிந்த ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்ச்செல்வன் துணைத் தலைவர் கன்னியப்பன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சாலை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் உறுதி அளித்தனர்.இதனை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






