என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாறைக்கல்"

    • பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள முதல் தட்டு பகுதியில் அருவிப் பாறையிலிருந்து சுமார் 100 கிலோ எடை கொண்ட ஒரு பாறைத் துண்டு பெயர்ந்து கீழே விழுந்தது.
    • அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்டத்தில் குமரி குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவிக்கு தொடர் விடுமுறை காரணமாக ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் தினமும் வந்த வண்ணம் உள்ளனர்.

    இந்நிலையில் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் உள்ள முதல் தட்டு பகுதியில் அருவிப் பாறையிலிருந்து சுமார் 100 கிலோ எடை கொண்ட ஒரு பாறைத் துண்டு பெயர்ந்து கீழே விழுந்தது. இதைக்கண்டு அப்பகுதியில் குளித்துக் கொண்டிருந்த பெண்கள் அதிர்ச்சியடைந்து விலகினர். அதே வேளையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதையடுத்து அருவி ஊழியர்கள் விரைந்து வந்து அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்களை பாதுகாப்பாக வேறு பகுதிக்கு மாற்றினார்கள்.

    இதைத் தொடர்ந்து திற்பரப்பு பேரூராட்சி தலைவர் பொன் ரவி, செயல் அலுவலர் பெத்ராஜ், பொறியாளர் தங்கபாய் ஆகியோர் அருவிப்பகுதிக்கு வந்து பாறை உடைந்த பகுதியை பார்வையிட்டனர்.

    தொடர்ந்து அந்தப் பகுதியில் நின்று யாரும் குளிக்கக் கூடாது என்று அறிவுறித்தியதுடன், அப்பகுதியில் தண்ணீர் விழாத வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இன்று அந்த பகுதியில் யாரும் குளிக்க வேண்டாம் என்று பேரூராட்சி ஊழியர் மூலம் அறிவுறுத்தப்பட்டது.

    ×