என் மலர்
நீங்கள் தேடியது "கால்நடைமருத்துவம்"
- அட்மா மாநில உறுதுணை விரிவாக்கத் திட்டத்தின் கீழ் கால்நடை வளர்போருக்கு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
- ஏற்பாடுகளை அட்மா மாநில திட்டத்தின் மேலாளர் சாலமோன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
கயத்தாறு:
கயத்தாறு யூனியன் தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்தில் கயத்தாறு வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ் தலைமையில், அட்மா மாநில உறுதுணை விரி வாக்கத் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு வேளாண்மை துறை மூலம் தாது உப்புக்கள் இறை உணவுகள் வழங்குதல், அதனை பயன்படுத்தும் விதம் குறித்து கயத்தாறு கால்நடை மருத்துவர் மனோஜ்குமார் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்போருக்கு. செயல்முறை விளக்கம் அளித்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை அட்மா மாநில திட்டத்தின் மேலாளர் சாலமோன், நவராஜ், பொற்செல்வன் மற்றும் அட்மா உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் ரத்தினம்பால், ஜெய லெட்சுமி ஆகியோர் செய்திருந்தனர்.






