என் மலர்
நீங்கள் தேடியது "புதிய சார்பதிவாளர்"
- பொதும்பு ஊராட்சியில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார்.
- வடக்கு வருவாய் கோட்டத்தில் உள்ள 33 கிராமங்கள் பதிவு எல்லைக்கு உட்பட்ட கிராமங்களாக உட்படுத்தப்பட்டுள்ளது.
அலங்காநல்லூர்
மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சிக்கு உட்பட்ட சேவை மைய கட்டிடத்தில் புதிய சார்பதி வாளர் அலுவலகம் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த அலுவலகத்தை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி ரிப்பன் வெட்டி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அணிஷ் சேகர் தலைமை தாங்கினார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் ஜோதி நிர்மலசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் தனசேகர், ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மதுரை வடக்கு பதிவு மாவட்டத்திற்கு உட்பட்ட பொதும்பு சார்பதிவாளர் அலுவலகமாக வடக்கு வருவாய் கோட்டத்தில் உள்ள 33 கிராமங்கள் பதிவு எல்லைக்கு உட்பட்ட கிராமங்களாக உட்படுத்தப்பட்டுள்ளது.






