என் மலர்
நீங்கள் தேடியது "செம்மண் கடத்திய டிரைவர் ஓட்டம்"
- திருட்டுத்தனமான ஜே.சி.பி. மூலம் செம்மண்ணை அள்ளுவது தெரிந்தது.
- அதிகாரிகள் வருவதை பார்த்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
தேன்கனிக்கோட்டை,
தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட சாலிவாரம் வி.ஏ.ஓ. லட்சுமிகாந்தன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், திருட்டுத்தனமான ஜே.சி.பி. மூலம் செம்மண்ணை அள்ளுவது தெரிந்தது.
அதிகாரிகள் வருவதை பார்த்த டிரைவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார்.
இதையடுத்து பொக்லைன் வாகனத்தை பறிமுதல் செய்த வி.ஏ.ஓ. லட்சுமிகாந்தன் தேன்கனிக்கோட்டை போலீசில் ஒப்படைத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






