என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்கள்"
- மாநில மாநாடு மற்றும் இளைஞர் முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
- பக்தர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.
ஓசூர்,
ஓசூரில் ஸ்ரீராமகிருஷ்ணர் பக்தர்கள் 30-வது மாநில மாநாடு மற்றும் இளைஞர் முகாம் 2 நாட்கள் நடைபெற்றது.
ஓசூரில் ரயில் நிலைய சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், முதல் நாள் பக்தர்களுக்கான நிகழ்ச்சி நடந்தது. நேற்று இளைஞர் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு, ஓசூர் பி.எம்.சி. டெக் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.குமார் தலைமை தாங்கினார். மீரா மருத்துவமனை நிறுவனர் டாக்டர் சண்முகவேல் முன்னிலை வகித்தார்.
மாநாட்டில், ராமகிருஷ்ணர், சாரதா தேவியார் பற்றிய உபதேசங்கள், பஜனைகள், பக்தர்களுக்கான சொற்பொ ழிவுகள் இடம்பெற்றன.
இளைஞர்களுக்கான முகாமில், தியானம், சமுதாய முன்னேற்றம் பற்றிய சொற்பொழிவு, சுவாமி விவேகானந்தரின் அவதார நோக்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சுவாமி வீரபத்ரானந்தா, சுவாமி வேத புருஷானந்தா, சத்யானந்தா மகராஜ், சுவாமி சுத்பானந்த மகராஜ் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழி வாற்றினார்கள். இதில், பக்தர்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டை ஓசூர் பி.எம்.சி.டெக் கல்வி நிறுவனங்கள் மற்றும் மீரா மருத்துவமனை இணைந்து நடத்தின.






