என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடன் மதிப்பீடு"

    • கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டார்.
    • வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளர் கூட்டத்தில் நபார்டு வங்கியின் 2023-24 ஆண்டுக்கான வளம் சார்ந்த கடன் திட்ட அறிக்கையை மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்ததாவது:-

    வளம் சார்ந்த கடன் திட்டம் விவசாயத்தில் நீண்டகால கடன் வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை விளக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விவசாயத்தில் அடிப்படை கட்டுமான வசதிகளை பெருக்கி, விவசாயத்தை ஒரு லாபகரமான வளம் நிறைந்த தொழிலாக மாற்றிட இத்திட்டம் உதவும், வேளாண்மையில் எந்திரமயமாக்கல் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன முறையை பயன்படுத்துதல், கால்நடை வளர்ப்பை விவசாயத்தின் ஒரு அங்கமாக செய்தல், விவசாயிகளின் வருமானத்தை பெருக்க உதவிடும் வகையில் வங்கிகள் இது போன்ற முதலீடுகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    தமிழகத்தின் ஊரக மற்றும் வேளாண் வளர்ச்சி பணியில் முக்கிய பங்கு வகிக்கும் நபார்டு வங்கி, தருமபுரி மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற வளம் சார்ந்த தகவல்களை சேகரித்து அதன் மூலம் ரூ.7564.68 கோடி அளவுக்கு கடனாற்றல் உள்ளது என மதிப்பீடு செய்துள்ளது.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தீபனாவிஸ்வேஸ்வரி, இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் பத்மாவதி, பொது மேலாளர் மாவட்ட தொழில் மையம் கார்த்திகைவாசன், மாவட்ட முதன்மை வங்கி மேலாளர் கண்ணன், நபார்டு வங்கி மேலாளர் பிரவீன் பாபு, வங்கிகளுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அரசுதுறை அலுவலகர்கள் கலந்து கொண்டனர்.

    ×