என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு கேபிள் டி.வி. ஆப்ரேட்டர்கள்"

    • திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அரசு கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் பங்கேற்றனர்.
    • மாதந்தோறும் 60 சதவீத வாடிக்கையாளரே முறையாக சந்தாதொகையை செலுத்துகின்றனர்.

    திருப்பூர்:

    அரசு கேபிள் டி.வி.,ஆபரேட்டர்களுக்கான ஆலோசனை கூட்டம் திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. அரசு கேபிள் டி.வி., தாசில்தார் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார்.திருப்பூர், அவிநாசி, பல்லடம், உடுமலை உட்பட மாவட்டம் முழுவதும் உள்ள அரசு கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் பங்கேற்றனர்.

    இதில் தாசில்தார் ரவிச்சந்திரன் பேசுகையில், அரசு கேபிள் டி.வி., ஒளிபரப்பு கடந்த நவம்பர் 19ந் தேதி முதல் 22-ந்தேதி வரை 4 நாட்கள் தடைபட்டது.அந்த நாட்களுக்கான சந்தா தொகையை தள்ளுபடி செய்வது குறித்து உயர் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் இதுகுறித்து அறிவிப்பு வெளியாகும்.ஆபரேட்டர்கள் வழக்கமாக சந்தா செலுத்தும் தளம் முடங்கியுள்ளது. அரசு கேபிள் டி.வி., தளத்தில் சந்தா செலுத்துவதற்கான புதிய பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    புதிய தளத்தை பயன்படுத்தி கடந்த மாதம் செலுத்திய தொகையில் 90 சதவீதத்தை இம்மாதம் 24-ந் தேதிக்குள் ஆபரேட்டர்கள் செலுத்த வேண்டும் என்றார்.

    கேபிள் டி.வி., ஆபரேட்டர்கள் பேசுகையில்,

    மாதந்தோறும் 60 சதவீத வாடிக்கையாளரே முறையாக சந்தாதொகையை செலுத்துகின்றனர். ஒளிபரப்பை நிறுத்திதான் 40 சதவீதம் பேரிடம் தொகையை வசூலிக்க வேண்டியுள்ளது. சர்வர் பிரச்னையால் தற்போது சந்தா செலுத்தாதோரின் ஒளிபரப்பை நிறுத்த முடியவில்லை.புதிய பாக்ஸ்களை செயல்படுத்துவது அனைத்தும் முடங்கியுள்ளன.

    இந்நிலையில் எங்களால் 90 சதவீத சந்தா தொகையை எப்படி செலுத்தமுடியும்? சந்தா செலுத்தமாட்டோம். சர்வர் பிரச்சினை சரிசெய்யப்பட்டபின் பயன்பாட்டில் உள்ள பாக்ஸ்களுக்கான முழு சந்தா தொகையையும் செலுத்தி விடுகிறோம்.அரசு கேபிளில் ஒளி பரப்பு அடிக்கடி தடைபடுகிறது. பிரதான கேபிள் பாதிக்கப்படும்போது ஆபரேட்டர்களாகிய நாங்கள்தான் சரி செய்கிறோம்.அரசு தரப்பு பணியாளர்கள் முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதில்லை.

    சந்தாதாரர்களிடம் கறார் வசூலில் ஈடுபட்டால் டி.டி.எச்.,க்கு மாறி விடுகின்றனர். ஒளிபரப்பு பாதிப்பு, சந்தா தொகை செலுத்துதல் உள்ளிட்ட எந்த ஒரு தகவலையும் ஆபரேட்டர்களுக்கும் ஸ்கோரோலிங் மூலம் சந்தாதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

    ×