என் மலர்
நீங்கள் தேடியது "திறனறிதல் தேர்வு"
- கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் முடிந்தது.
- நாள்தோறும், 100 பேருக்கு நேர்காணல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி,
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் முடிந்தது.
கிருஷ்ணகிரி தாலுகாவில் காலியாக உள்ள, 15 கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்த, 2,246 பேரில், 1,590 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களுக்கு திறனறிதல் தேர்வு மற்றும் நேர்காணல் கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
நேர்காணலை கிருஷ்ணகிரி தாசில்தார் சம்பத், தனி தாசில்தார் விஜயகுமார், தலைமையிடத்து துணை தாசில்தார் விஜயன் ஆகியோர் நடத்தினார்கள்.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு வாசிக்க சொல்லுதல், என்ற முறையில் தேர்வு நடந்தது. இதில், பங்கேற்றவர்களின் திறமைக்கேற்ப மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நாள்தோறும், 100 பேருக்கு நேர்காணல் நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.






