என் மலர்
நீங்கள் தேடியது "சத்துணவு கூடம் திறப்பு"
- சத்துணவு கூடம் ரூ.9.34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது.
- சத்துணவு அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் கூடலூர் ஊராட்சி ஒன்றியம், மசினகுடி ஊராட்சி, மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் சமூக நலத்துறை சார்பில் சத்துணவு கூடம் ரூ.9.34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதனை கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா மற்றும் மசினகுடி ஊராட்சி மன்ற தலைவர் மாதேவிமோகன் ஆகியோர் திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் துணைத் தலைவர் நாகேஷ், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் (பொறுப்பு) சிவக்குமார், ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் வனிதா, மசனகுடி பஜார் தி.மு.க கிளை செயலாளர் சதீஷ்குமார், சத்துணவு அமைப்பாளர்கள், ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.






