என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம்"

    • வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நல நிதி செலுத்த, வேலையளிப்பவர் கடமைப்பட்டவராவார்.
    • 2022-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையினை 31.1.2023-ந்தேதிக்கு வங்கி வரைவோலை அல்லது காசோலையாக அனுப்பி வைக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழ்நாடு தொழிலாளர் நலவாரிய செயலாளர் யாஸ்மின் பேகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தொழிற்சாலைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், மலைத் தோட்ட நிறுவனங்கள், ஐந்தும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரியும் கடைகள் மற்றும் உணவு நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தொழிலாளிக்கும், தொழிலாளியின் பங்காக ரூ.20, ஒவ்வொரு தொழிலாளிக்கும் வேலையளிப்பவர் பங்காக ரூ.40-ம் சேர்த்து ஆக மொத்தம் ரூ.60 வீதம் தொழிலாளர் நலநிதி பங்கு தொகையாக நிர்வாகம் செலுத்த வேண்டும்.

    வருடத்தில் 30 நாட்களுக்கு மேல் பணிபுரிந்த அனைத்து வகை தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் நலநிதி செலுத்த, வேலையளிப்பவர் கடமைப்பட்டவராவார். எனவே 2022-ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதித் தொகையினை 31.1.2023-ந்தேதிக்கு முன்பாக செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நலவாரியம், டி.எம்.எஸ். வளாகம், தேனாம்பேட்டை, சென்னை-600 006 என்ற முகவரிக்கு வங்கி வரைவோலை அல்லது காசோலையாக அனுப்பி வைக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×