என் மலர்
நீங்கள் தேடியது "சரியான அளவில் வழங்க வேண்டும்"
- 35 கிலோ அரிசி வழங்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
- கலெக்டர் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி தாலுகாவில் 135 முழுநேர ரேஷன் கடை, 119 பகுதிநேர ரேஷன்கடை என மொத்தம் 254 ரேஷன்கடைகள் உள்ளன. இவற்றில் ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 434 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி தாலுகாவில் கட்டிகானப்பள்ளி ஊராட்சி, பாரதியார் நகர், அகசிப்பள்ளி ஊராட்சி, கனகமுட்லு மற்றும் பெரியமுத்தூர் ஊராட்சி அவதானப்பட்டி ரேஷன் கடைகளை கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பொதுமக்களிடம் ரேஷன்கடைகளில் பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா என்றும், ரேஷன்கடை சரியான நேரத்திற்கு திறக்கப்படுகிறதா என கலெக்டர் பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.
முன்னதாக கட்டிகானப்பள்ளி ஊராட்சி, பாரதியார் நகர் கூட்டுறவு ரேஷன் கடை, அகசிப்பள்ளி ஊராட்சி கனகமுட்லு கிராமத்தில் கூட்டுறவு ரேஷன்கடை மற்றும் பெரியமுத்தூர் ஊராட்சி அவதானப்பட்டி கிராமத்தில் பெரியமுத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன்கடைகளை நேரில் பார்வையிட்டு வறுமை கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் அரிசி இருப்புகள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அரிசி இருப்பு விவரங்கள் அன்னோதயா திட்டத்தின் கீழ் 35 கிலோ அரிசி வழங்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பருப்பு, சமையல் எண்ணை, அரிசி, சர்க்கரை, கோதுமை, மண்ணெண்ணை குறித்து பதிவேடுகள் மற்றும் மின்னனு விற்பனை முனையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ரேஷன் கடைக்கு வரும் பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் பொருட்களை சரியான அளவில் வழங்க வேண்டும்.
அங்காடியை சுத்தமாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க வேண்டும் என விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது கிருஷ்ணகிரி வட்ட வழங்கல் அலுவலர் ரமேஷ், வட்ட வழங்கல் வருவாய் ஆய்வாளர் சத்தீஸ், வட்ட பொறியாளர் சரவணன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






