என் மலர்
நீங்கள் தேடியது "அச்சுறுத்தும் ஒற்றை யானை"
- பஜனை குட்டையில் நேற்று மாலை ஒற்றை யானை தண்ணீர் குடித்தது.
- பட்டாசுகள் வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட் டம், அஞ்செட்டி வனச் சரகத்தில் ஏராளமான யானைகள் முகாமிட்டுள்ளன. அஞ்செட்டி சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவு அருகே உள்ள பஜனை குட்டையில் நேற்று மாலை ஒற்றை யானை தண்ணீர் குடித்தது.
அங்கு, ஆனந்த குளியல் போட்டு விட்டு வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை அஞ்செட்டி சாலையில் முகாமிட்டது.
இதனால், அவ்வழியாக அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இது குறித்த தகவலின் பேரில், அஞ்செட்டி வனச்சரகர் சீத்தாராமன் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் விரைந்து வந்து யானையை தாரை தப்பட்டை அடித்தும், பட்டாசுகள் வெடித்தும், அதிக ஒலி எழுப்பியும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.
யானைகள் சாலையில் உலா வருவதால் வாகன ஓட்டிகள் செல்பி எடுக்க முயற்சி செய்யவேண்டாம். சாலையில் அதிக ஒலி எழுப்பியபடி செல்ல வேண்டும்,
யானைகளை கல்லால் தாக்கி விரட்ட முயற்சிக்க கூடாது என வனத்துறையினர் வாகன ஓட்டிகளை அறிவுறுத்தியுள்ளனர்.
இதனால் வன துறையினர் அப்பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து தீவிர கண்கானிப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.






